வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கட்டுப் பாட்டில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வேலுார் மற்றும் ராணிபேட்டை மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் மாபெரும் தொழிற் பழகுநர் பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ம் தேதி நடக்கிறது.

ராணிப்பேட்டை எம் பிடி ரோடு, ஐவிபிஎம் எதிரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிமணிவரை நடக்கும் முகாமில், பல்வேறு அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தொழிற் பழகுநர் பயிற்சி வேலை வாய்ப்பு வழங்க உள்ளன.

இதில், ஐடிஐ தேர்ச்சி/ தோல்வி, 8 ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி, எஸ் எஸ்எல்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி ஆகிய கல்வித்தகுதி உள்ளவர்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுனர் வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம் என்று ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.