தமிழகத்தில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதன்படி எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் -- நாகர்கோவில் -- எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில் ஏப்., 15 முதல் இயக்கப்படும்.எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல்- - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் சென்னையிலிருந்து ஏப்., 15 முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில், நாகர்கோவிலில் இருந்து ஏப்., 17 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:40க்கு சென்னை சென்று சேரும். நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்துார், மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை செல்லும் விரைவு ரயில் கொடைரோட்டில் நிற்காது. கூடுதலாக பெரம்பூரில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.