வேர்க்குரு(Prickly heat)

கோடைகாலங்களில் அதிகப்படியான வியர்வையினால் நமது உடலில் வேர்க்குரு ஏற்படுகிறது.இறுக்கமான ஆடைகளை அணியும் பொது போதிய காற்றோட்டம் இன்மையால் அதிக அளவு வியர்வை வெளியேறி வியர்க்குரு உருவாகும்.

இதன் அறிகுறிகள்

தோலில் சிறு சிறு சிவப்புநிற புள்ளிகள்

பாதிக்காப்பட்ட இடத்தில அதிக அரிப்பு

இதை குணப்படுத்த

சாதம் வடித்த கஞ்சியை வேர்க்குரு உள்ள இடத்தில தடவவும். கஞ்சி காய்ந்த பின் குளித்து வர வியர்க்குரு குணமாகும்.

வெங்காயச்சாறை வியர்க்குரு மேல் தடவி வந்தால் விரைவில் குணமடையும்.

கற்றாழையை(Aloe leaf) வெட்டி அதில் உள்ள பசை போன்ற பொருளை வேர்க்குரு உள்ள இடத்தில தடவி வர வேர்க்குரு குணமடையும்.

பேக்கிங் சோடவும்(Baking soda) குளிர்ந்த நீரையும் நன்றாக கலந்து அந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சுத்தப்படுத்தவும்.வேர்க்குரு குணமாகும் வரை தினமும் செய்து வரவும்.

உருளைக்கிழங்கை(Potato) நன்றாக சீவி வியர்க்குரு உள்ள இடத்தில் தேய்த்து ஒரு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.இதனை குணமாகும் வரை செய்ய வேண்டும்.

தர்பூசணி,எலுமிச்சை, பப்பாளி போன்ற பழங்களின் சாறை பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர குணமாகும்.

நகச்சுற்று (Paronychia) குணமாக

நகச்சுற்று நகங்களில் ஏற்றப்படும் நோய்த்தொற்று ஆகும்.இது பெரும்பாலும் இது விரல்களில் காயம் ஏற்படும்போது நகத்துக்கும் தோலுக்கும் இடையே Staphylococci என்னும் பாக்டீரியா சென்று நோய்தொற்றை ஏற்படுத்தும். இது நகச்சுற்று எனப்படுகிறது.

கெமிக்கல் அலர்ஜிகாளாலும் நகச்சுற்று ஏற்பட வாய்ப்புண்டு.

இதன் அறிகுறிகள்

நகத்தை சுற்றிலும் வீக்கம்.

சிவந்து காணப்படுதல்.

பாதிக்கப்பட்ட இடத்தில அதிகமான வலி

குணப்படுத்த

அருகம்புல், மஞ்சள், சுண்ணாம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு பொடி செய்து பாதிப்பு உள்ள இடங்களில் தடவி வர நகச்சுற்று குணமடையும்.

பூண்டை(Garlic) அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் தடவி வர சரியாகும்.

எலுமிச்சையை நகச்சுற்று வந்த இடத்தில் உபயோகப்படுத்த குணமடையும்.

தேனையும், இலவங்கப்பட்டையும்(Cinnamon) கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர குணமடையையும்.

வெற்றிலையையும் சுண்ணாம்பையம் நன்கு அரைத்து அதனை நகச்சுற்று உள்ள இடத்தில தடவி வர விரைவில் குணமடையும்.