ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலு காவுக்கு உட்பட்ட வெளிதாங்கிபுரம் மோட்டூர் கிராமத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதியதாக போடப்பட்டுள்ள பிளாஸ்டிக் துகள் கலந்த தார்ச்சாலையின் தரத்தை நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது தார்ச்சாலையின் சாய்வு தளம் எவ்வளவு என்பதை சமதள மானியை வைத்து ஆய்வு செய்தார். மேலும் தார்ச் சாலையை ஒரு சதுர அடி தோண்டி எடுத்து அதன் தடிமன் அளவை சரி பார்த்தார்.
இதையடுத்து மகேந்திரவாடி கிராமத்தில் ஒருங்கிணைந்த அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கருமண் குட்டை குளத்தின் பணிகளையும், கீழ்வீதி கிராமத்தில் நூலக கட்டட பணி களையும் ஆய்வு செய்தார். அப்போது ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் சீனி வாசன் உதவி செயற் பொறியாளர்கள் தனசேகரன், அரிகிருஷ்ணன்,சுஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.