அரக்கோணம்: தமிழ்நாட்டின் நம்பர் 1 ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமாகவும் மற்றும் நிலப்பரப்பை திரட்டி ஒருங்கிணைத்து வழங்கும் துறையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய, அதிக அனுபவம் வாய்ந்த பெருநிறுவனமாகவும் ஜி ஸ்கொயர் உள்ளது. இது அரக்கோணத்தில் சென்னை - அரக்கோணம் நெடுஞ்சாலையையொட்டி கட்டுப்படியாகக்கூடிய விலையில் ஒரு தொழிற்பூங்கா தொடங்குவதாக நேற்று அறிவித்துள்ளது. இதற்காக, சியட், ஜே.கே. டயர்ஸ், இஎல்ஜிஐ, முருகப்பா குழுமம், சிஜிஐ, அசெண்டாஸ் போன்ற கவுரவமிக்க பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு தொழிலகங்கள் அமைப்பதற்காக 1000 ஏக்கர் நிலத்தை ஜி ஸ்கொயர் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொழிலக பூங்காவை தொடங்கும் இந்த புதிய முயற்சியை தொடர்ந்து சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலும் தனது செயல்பாட்டை விரிவாக்கம் செய்யவும் மற்றும் தொழிலகங்களுக்கான அமைவிடங்களை கட்டுப்படியாகக்கூடிய விலையில் வழங்கவும் ஜி ஸ்கொயர் திட்டமிட்டிருக்கிறது. அரக்கோணத்தில் தமிழ்நாட்டின் முதன்மையான தொழிலக மையங்களுள் ஒன்று அமைந்துள்ள இப்பகுதியில் ஜி ஸ்கொயரின் தொழிற்பூங்கா நிறுவப்படுகிறது.அந்தந்த தொழிலகத்திற்கே உரிய குறிப்பான தேவைகளை பூர்த்தி செய்வதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரே நிலத்தொகுப்பில் 400 ஏக்கர்கள் என்ற பரப்பளவிற்குள் ஜி ஸ்கொயர் தொழிற்பூங்கா வழங்குகிறது. 

அனைத்து போக்குவரத்து இணைப்பு வசதிகளும் தொழிற்பூங்காவின் அமைவிட சிறப்பை உயர்த்துகின்றன. சென்னைக்கு அருகே கட்டுப்படியாக கூடிய விலையில் கிடைக்கும் ஒரே தொழிற்பூங்கா இதுவாகும். தொழிலகங்களுக்கான மனைகளின் பரப்பு 20 முதல் 100 ஏக்கர் வரை இருக்கும். மேலும் விவரங்களுக்கு: www.gsquareindustrialestate.com இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம். ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைமை செயலாக்க அதிகாரி என். ஈஸ்வர் கூறுகையில் எங்களிடமிருந்து இந்த நிலப்பரப்புகளை தொழிலகங்கள் வாங்கும்போது சொத்து மீது எவ்வித தடைகளோ, வில்லங்கமோ இருக்காது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தொழிலகங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கும்’’ என்றார்.