கோவை, பெங்களூர், மைசூர், திருப்பதி மற்றும் மின்சார ரெயில்கள் என 19 ரெயில்கள் 4 நாட்களுக்கு பகுதி மற்றும் முழுமையாக ரத்து செய்யப்பட்ட திடீர் அறிவிப்பு பயணிகளை கடும் அவதிக்குள்ளாக்கியது.

அரக்கோணம் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்கள்முழுமையாகவும், பகுதியாகவும் நேற்று, இன்று (20&ந்தேதி) மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

சென்னையில் இருந்து மைசூர் செல்லும் (12609) ரெயில், கோவை இண்டர்சிட்டி ரெயில், (12679) பெங்களூர் ரெயில் (12607) ஆகியவை காட்பாடி ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து இயக்கப்படுகிறது.

அதேபோல் மறுமார்க்கத்தில் பெங்களூரில் இருந்து சென்னை வரை செல்லும் (12608) ரெயில், கோவை ரெயில் (12680), மைசூர் ரெயில் (12610) ஆகிய ரெயில்கள் அரக்கோணம், சென்னை சென்ட் ரல் வரை செல்லாமல் காட்பாடியில் இருந்து 4 நாட்களுக்கு இயக்கப்படும்.

முழுமையாக ரத்து சென்னையில் இருந்து திருப்பதி வரை செல்லும் சப்தகிரி மற்றும் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்களான (16054, 16053) ஆகிய ரெயில்கள் முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் தானாபூரில் இருந்து பெங்களூர் செல்லும் (12296) ரெயில் பெரம்பூர் வழியாக வராமல் ரேணிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி வழியாக பெங்களூர் செல்கிறது.

மின்சார ரெயில்கள் ரத்து சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் ரெயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு கடம்பத்து£ர் வரை இயக் கப்படுகிறது.

அதேபோல் காலை 9.10 மணிக்கு புறப்படும் ரெயில் திருவள்ளூர் வரையும், காலை 9.50 மணிக்கு புறப்படும் ரெயில் கடம்பத்து£ர் வரையும், காலை 10 மணிக்கு திருத்தணி வரை செல்லும் ரெயில் திருவள்ளூர் வரையும், காலை 11 மணிக்கு புறப்படும் ரெயில் கடம்பத்து£ர் வரையும் இயக்கப்படுகிறது.

அரக்கோணத்தில் இருந்து காலை 10 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் செல்லும் ரெயில், திருத்தணியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் ரெயில், அரக்கோணத்தில் இருந்து காலை 11 மணி, காலை 12 மணி ஆகிய ரெயில்கள் முழுமையாக ரத்து செய் யப்படுகிறது.

அதேபோல் திருத்தணியில் இருந்து காலை 12.35 மணி, அரக்கோணத்தில் இருந்துபகல் 1.50 மணிக்கு புறப்படும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படு கிறது.

பயணிகளின் நலன் கருதி திருவள்ளூர் மற்றும் கடம்பத்து ரில் இருந்து சென்னைக்கு குறிப் பிட்ட இடைவெளியில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெங்களூர், மைசூர் ரெயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்து 10 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால் 11 மின்சார ரெயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்படுவது குறித்து நேற்று முன்தினம் திடீரென அறி விப்பு வெளியானது. அரக்கோணம் ரெயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை 8 மணி முதல் ரெயில்கள் ரத்து குறித்து அறிவிக்கப்பட்டது.

நேற்று, இன்று மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை ரெயில்கள் ரத்து செய்யப்படு கிறது.