ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலை அடிவாரத்தில் விஜய துர்கையம்மன் கோயில் அமைந்துள்ளது.
இங்கு, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு விஜய துர்கை அம்மனுக்கு ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது. காலை 5.30மணிக்கு துர்கை அம்மனுக்கு துர்கா ஹோமம், பூர்ணாஹூதி, ஆயிரத்து 8 சக்ஸ்ரநாம அரச்சனை, மாலை 5மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.