Special cleaning work on the occasion of the 75th Independence Day Amuda festival in Ranipettai district
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத நிலையை ஏற்படுத்தி வீடு தோறும் மஞ்சப்பை வழங்கும் திட்டம் விரைவில் தொடங் கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். அரசு அலுவலர்களால் நேற்று ஒரே நாளில் 3.5 டன் பிளாஸ்டிக் குப்பை அகற்றப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் 75-வது சுதந்திர தின திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு வார நிகழ்வு நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் இல்லாத ராணிப்பேட்டை மாவட்டம் என்ற இலக்கை அடைய அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கூட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில், பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் இணைந்து ராணிப் பேட்டை நகரம் மற்றும் நகரத்தை ஒட்டிய பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பிளாஸ்டிக் குப்பை அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். முத்துக்கடை பேருந்து நிறுத்தம் முதல் அம்மூர் சாலை வரை, வாலாஜா சாலையில் இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல் சிப்காட் வரை, பாலாறு மேம்பாலம் முதல் சென்னை சாலையில் உள்ள கேஸ் கிடங்கு வரையும், ஆற்காடு மேம்பாலம் முதல் டெல்லி கேட் வரையும் பிளாஸ்டிக் குப்பை அகற்றும் பணி நடைபெற்றது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத நிலையை மாற்ற அரசு அலுவலர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாடிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள குழுக் கள் மூலம் அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். விதி களை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மஞ்சப்பை திட்டம் மாவட்டத்தில் விரைவில் செயல்படுத்தப்படும். பிளாஸ்டிக் முற்றிலும் அகற்றப்பட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் மஞ்சப்பை வழங்கப்படும்’’ என்றார்.
இதில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குநர் லோகநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு அலுவலர்களால் தொடங்கப் பட்ட இந்த பிளாஸ்டிக் குப்பை அகற்றும் பணியில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 3.5 டன் பிளாஸ்டிக் குப்பை அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.