Meat shop worker commits suicide by hanging near Arcot
வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் (19). இறைச்சிக் கடைகூலித் தொழிலாளி. இவரது அண்ணன் இம்ரான்.இவர் கீழ்விஷாரத்தில் மாமியார் வீட்டில் தங்கி அங்கு உள்ள தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். சுலைமானுக்கு சரிவர வேலை கிடைக்காததால் தனது அண்ணன் வீட்டில் தங்கி மேல்விஷாரத்தில் இறைச்சி கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இம்ரான் வசிக்கும் மாமியார் வீடு சிறியதாக இருப்பதால் அங்கு சுலைமான் உடன் தங்கி இருப்பது குறித்து உறவினர்கள் விமர்சனம் செய்ததாக தெரிகிறது. இதனையறிந்த சுலை மான் வேதனை அடைந்து நேற்று முன்தினம் இரவு தனது துணிகளை எடுத்துக்கொண்டு வேலூர் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.
நேற்று காலை வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு இம்ரான் போன் செய்து தனது தம்பி குறித்து விசாரித்துள்ளார். அப்போது சுலைமான் வீட்டிற்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இம்ரான் தனது தம்பியை பல இடங்களில் தேடி உள்ளார். அப்போது கீழ்விஷாரம் பைபாஸ் சாலையில் தனியார் கேஸ்குடோன் அருகிலுள்ள காலி இடத்தில் பெரிய அளவிலான எல்லை கல்லில் தனது பேன்ட்டில் சுலைமான் தூக் குப்போட்டு தர்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுலைமான் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இம்ரான் கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ மகாராஜன் விசாரணை செய்து வருகிறார்.