ராணிப்பேட்டை மாவட் டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறையின் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.

Horticulture farmers can apply for the prize Collector's Notice


மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.10ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் சொந்த நிலம் வைத்திருக்கும் தோட்டக் கலைப் பயிர் சாகுபடி செய்கின்ற விவசாயிகள் இதில் பங்கு பெறலாம். விவசாயிகள் (www.tnhonticulture.tn.gov.in) என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்ககம் செய்து பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 23.03.2022க்குள் சமர்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் அரக்கோணம் தாலுக்கா 9443696846 ஆற்காடு தாலுக்கா 9750390717 காவேரிப்பாக் கம் தாலுக்கா 9025468461 சோளிங்கர் தாலுக்கா 9486407176 நெமிலி தாலுக்கா 9025468461, திமிரி தாலுக்கா 9789636301 வாலாஜா தாலுக்கா 9688541875 என்று ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.