குறள் : 702

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்

மு.வ உரை :

ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை :

ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

சாலமன் பாப்பையா உரை :

அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.

Kural 702

Aiyap Pataaadhu Akaththadhu Unarvaanaith
Theyvaththo Toppak Kolal

Explanation :

He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (ones mind).

Horoscope Today: Astrological prediction for March 27, 2022

இன்றைய ராசிப்பலன் - 27.03.2022


இன்றைய பஞ்சாங்கம்

27-03-2022, பங்குனி 13, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி மாலை 06.04 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 01.32 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம்

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

Today rasi palan - 27.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 27.03.2022

மேஷம்

இன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

ரிஷபம்

இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்

இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை.

கடகம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.

கன்னி

இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

துலாம்

இன்று நீங்கள் பண நெருக்கடியில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

தனுசு

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை அளிக்கும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வீட்டில் பெண்களுக்கு வேலைபளு கூடும்.

மகரம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.

மீனம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,