குறள் : 678
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
மு.வ உரை :
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல் ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
கலைஞர் உரை :
ஒரு செயலில் ஈ.டுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை :
ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.
Kural 678
Vinaiyaan Vinaiyaakkik Kotal Nanaikavul
Yaanaiyaal Yaanaiyaath Thatru
Explanation :
Just as one elephant may be used to tether another So one task may be the means of accomplishing another.
Horoscope Today: Astrological prediction for March 03, 2022
இன்றைய ராசிப்பலன் - 03.03.2022
இன்றைய பஞ்சாங்கம்
03-03-2022, மாசி 19, வியாழக்கிழமை, பிரதமை திதி இரவு 09.37 வரை பின்பு வளர்பிறை துதியை. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.56 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0.
இராகு காலம்
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 03.03.2022 | Today rasi palan - 03.03.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
ரிஷபம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் கிட்டும்.
கடகம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பண விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.
சிம்மம்
இன்று எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலங்கள் கிட்டும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல், பணவிரயங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு
இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.
மகரம்
இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பயணங்களில் கவனம் தேவை. உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
கும்பம்
இன்று இல்லத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் உதவி கிட்டும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,