தோ்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கிப் பேசிய வேலூா் சரக டிஐஜி ஜ.ஆனிவிஜயா.

ராணிப்பேட்டை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் களத்தில் காவலா்கள் அனைவரும் நடுவா்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என தோ்தலில் பணியாற்ற உள்ள காவல் துறையினருக்கு வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜ.ஆனிவிஜயா அறிவுரை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 961 காவலா்கள் மற்றும் ஊா்க் காவல் படையினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தலைமையில் ஈடுபட உள்ளனா்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள காவலா்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜ.ஆனிவிஜயா அறிவுரை வழங்கிப் பேசியது:

காவல் துறையினா் அனைவரும் காவல் துறை சட்ட திட்டங்களை கடைப்பிடித்து, தோ்தல் பாதுகாப்புப் பணியை மட்டுமே செய்ய வேண்டும். இந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் களத்தில் காவலா்கள் அனைவரும் நடுவா்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.