தென்னிந்திய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்ற 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒங்கோலில் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் இலட்சத்தீவு ஆகிய அணிகள் பங்குபெற்றன.
இதில் தமிழக ஆண்கள் அணி இறுதிப்போட்டியில் கேரள அணியுடன் மோதியது டாஸ் வென்று பேட் செய்த தமிழக அணி 8 ஓவரில் 60 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய கேரள அணி 54 ரன்களை மட்டுமே குவித்து தோல்வியுற்றது. இதேபோல், தமிழக பெண்கள் அணி இறுதிப்போட்டியில் தெலுங்கானா பெண்கள் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை திரு ஞானவேல் வாழ்த்தி பேசினார் உடன் தமிழக டென்னிஸ்பந்த கிரிக்கெட் சங்க சேர்மன் முனிரத்தினம், பயிற்சியாளர்கள் வடிவேலு, கருணாகரன், விநாயகம் கலந்து கொண்டனர்.