ராணிப்பேட்டை மாவட்டத்தில். மயான கொள்ளை திருவிழா வரும் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மயானக் கொள்ளை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அரக்கோணம் டவுன் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் எஸ்.பி. தீபா சத்யன் கடந்த இரண்டு நாட்களாக கேட்டறிந்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
மேலும், அரக்கோணம் பகுதியில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சேதுபதி ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து. டவுன் மற்றும் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்கள் யார்? யார்? என்பது குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலை பார்வையிட்டார்.
பின்னர் எஸ்.பி. தீபா சத்யன் நிருபர்களிடம் கூறுகை யில், "ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயான கொள்ளை திருவிழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டத்தில் 2 ரவு டிகள், புகையிலைப் பொருட்கள் விற்றது தொடர்பாக 13 பேர், கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நம்பிக்கை அளித்தார்.