குறள் : 675

பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

மு.வ உரை :

வேண்டிய பொருள் ஏற்றக்கருவி தக்க காலம் மேற்கொண்ட தொழில் உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.

கலைஞர் உரை :

ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.

Kural 675

Porulkaruvi Kaalam Vinaiyitanotu Aindhum
Iruldheera Ennich Cheyal

Explanation :

Before acting resolve all doubts through consideration of these five: Cost means time place and the action itself.


Horoscope Today: Astrological prediction for February 28, 2022

இன்றைய ராசிப்பலன் - 28.02.2022


இன்றைய பஞ்சாங்கம்

28-02-2022, மாசி 16, திங்கட்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 03.16 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. உத்திராடம் நட்சத்திரம் காலை 07.02 வரை பின்பு திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 05.19 வரை பின்பு அவிட்டம். மரணயோகம் காலை 07.02 வரை பின்பு அமிர்தயோகம் பின்இரவு 05.19 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷ விரதம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. 

இன்றைய ராசிப்பலன் - 28.02.2022 | Today rasi palan - 28.02.2022


மேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும்.

ரிஷபம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று பணவரவு சற்று குறைவாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

துலாம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக இருப்பது மூலம் பொருளாதார நெருக்கடி ஓரளவு குறையும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற சிக்கலை தவிர்க்கலாம்.

மகரம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

மீனம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல வளர்ச்சி உண்டாகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,