வேலூர் மாநகராட்சி வார்டு 24 இல் அதிமுக சார்பில் போட்டியிடும் வினோத் குமார் என்பவரின் வேட்புமனு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதனை கண்டித்து மாநகர் மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.