இஞ்சித் துவையல்


தேவையான பொருள்கள் : அளவு
இஞ்சி 25 கிராம்
பூண்டு 2 பல்
பச்சை மிளகாய் 5
உளுத்தம் பருப்பு 5 கிராம்
தேங்காய் (துருவியது) 10 கிராம்
நல்லெண்ணெய் 20 மி.லி.
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
உப்பு தேவையான அளவு


செய்முறை :


இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி, சிறு துண்டுகளாக அரிந்துகொள்ளவும். இஞ்சி, பூண்டு, உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல், சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை நல்லெண்ணெய்யில் போட்டுப் பச்சை வாசம் போகும்வரை நன்றாக வதக்கவும். பிறகு அவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து விழுதாக அரைத்து தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளவும்.

இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். பித்தத்தைத் தணிக்கும்.