தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா... இன்று 29,976  பேருக்கு மட்டுமே தொற்று.!!
தமிழ்நாட்டில் கடத்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று 1,50,931 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 29,976  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 32,24,236 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் 47  பேர் உயிரிழப்பு. இன்று 27,507 பேர் குணமடைந்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.