Banks to remain shut down for 12 days in February

இன்னும் சில தினங்களில் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் உள்ள 28 நாட்களில் 12 நாட்கள் வங்கி விடுமுறையாகும்.

அதெல்லாம் சரி தமிழக்கத்தில் எவ்வளவு நாள் விடுமுறை. பொது விடுமுறைகள் எத்தனை நாட்கள்? வாருங்கள் பார்க்கலாம்.

பொதுவாக ஒரு மாதம் தொடங்குவதற்கு முன்னதாக வங்கி விடுமுறை பற்றி அறிவிக்கப்படும். இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே திட்டமிட்டு செயல்பட முடியும்.

12 நாட்கள் விடுமுறை


ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். எனினும் இந்த விடுமுறை நாட்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். ஏனெனில் விடுமுறை நாட்களுக்கான வங்கி பணிகளை முன் கூட்டியே திட்டமிட்டு செய்யலாம்.

பொது விடுமுறை நாட்கள்


  • பிப்ரவரி 2 - சோனம் லோச்சார் (காங்டாக்கில் வங்கிகள் விடுமுறை)

  • பிப்ரவரி 5 - சரஸ்வதி பூஜை/ஸ்ரீ பஞ்சமி/பசந்த பஞ்சமி (அகர்தலா, புவனேஷ்வர், கொல்கத்தாவின் வங்கிகளுக்கு விடுமுறை)

  • பிப்ரவரி 15 - முகமது ஹஸ்ரத் அலி பிறந்த நாள்/லூயிஸ் - நாகை- நி (இம்பால், கான்பூர், லக்னோவில் வங்கிகள் மூடப்படும்)

  • பிப்ரவரி 16- குரு ரவிதாஸ் ஜெயந்தி(சண்டிகாரில் வங்கிகள் மூடப்படும்)

  • பிப்ரவரி 18 - டோல்ஜாத்ரா (கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்படும்)

  • பிப்ரவரி 19 - சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாபூர், மும்பை, நாக்பூரில் வங்கிகள் மூடப்படும்)


வார விடுமுறை நாட்கள்


  • பிப்ரவரி 6 - ஞாயிறு (வார விடுமுறை)

  • பிப்ரவரி 12 - இரண்டாவது சனிக்கிழமை (வார விடுமுறை)

  • பிப்ரவரி 13 - ஞாயிறு (வார விடுமுறை)

  • பிப்ரவரி 20 - ஞாயிறு (வார விடுமுறை)

  • பிப்ரவரி 26 - 4வது சனிக்கிழமை (வார விடுமுறை)

  • பிப்ரவரி 27 - ஞாயிறு (வார விடுமுறை)


தமிழகத்தில் எத்தனை நாட்கள்


தமிழகத்தில் வார விடுமுறை தவிர மற்ற பொது விடுமுறை நாட்கள் விடுமுறை இல்லை. ஆக இந்த விடுமுறை நாட்களால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு என்பது இல்லை. எனினும் மற்ற மாநிலங்கள் செல்லும் போது இது பயனுள்ளதாக இருக்கும்.