ராணிப்பேட்டை நகரத்தில் 3 இடங்களில் மயானம் உள்ளது. நகரத்தில் உள்ள 30 வார்டு இந்துக்கள், இந்த மயானத்தை . பயன்படுத்தி வந்தனர்.
எரிக்க வேண்டிய பிரேதங்களுக்காக ஆங்காங்கே விறகு பயன்பாட்டில் தகன மேடைகள் கட்டி பயன்படுத்தப் பட்டு வந்தது. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உடல்களை புதைப்பதற்கு பதில் எரிப்பதற்கும் பாலாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் ரூ.45 லட்சம் செலவில் 2015ம் ஆண்டு ஒரு நவீன வாயு தகன மேடை கட்டப்பட்டது. ஆனால் இதுவரை இந்த எரிமேடை பயன் பாட்டுக்கு எடுத்து வரப்படவில்லை.

அவ்வப்போது இது குறித்து நகராட்சி நிர்வாகத்தை கேட்கும்போது, இந்த எரிமேடையில் வைத்திருந்த இயந்திரங்கள் திருடுபோய்விட்டன. பாதுகாப்பு இல்லை என்று கூறினர். ஆனால் அதை சீர் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் இந்த எரிமேடையை பராமரிக்க தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு சில மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்திருப்பதாக நகராட்சி நிர்வாகம் கூறியது.

இது குறித்து சம்பந்தப் பட்ட தொண்டு நிறுவனத்திடம் கேட்டதற்கு வளாகத்தில் பல பணிகள் நிலுவையில் உள்ளது. நகராட்சி நிர்வாகம் அதை செய்து கொடுக்க வேண்டும். செய்து கொடுத்தவுடன் நாங்கள் இந்த எரி மேடையை பயன்பாட் எரிவாடுக்கு கொண்டு வந்து பராமரிப்போம் என்றனர். நகராட்சி நிர்வாகம் தனது மெத்தனத்தை கைவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் கோருகின்றனர்.