குறள் : 589

ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.

மு.வ உரை :

ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும் அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.

கலைஞர் உரை :

ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.

சாலமன் பாப்பையா உரை :

ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.

Kural 589

Otrer Runaraamai Aalka Utanmoovar
Sotrokka Therap Patum

Explanation :

Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together let him receive it.




இன்றைய பஞ்சாங்கம்

03-12-2021, கார்த்திகை 17, வெள்ளிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 04.56 வரை பின்பு அமாவாசை. விசாகம் நட்சத்திரம் பகல் 01.44 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. போதாயண அமாவாசை. கரிநாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00  

இன்றைய ராசிப்பலன் - 03.12.2021

மேஷம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணி புரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியான பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவை. நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கலாம். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண பேச்சுக்களில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொன்பொருள் சேரும். நினைத்தது நிறைவேறும்.

துலாம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். சுபமுயற்சிகளில் நற்செய்தி கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். எதிலும் கவனம் தேவை.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். 

கும்பம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் இனிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். பொன் பொருள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

மீனம்

இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,