ராணிப்பேட்டையில் ஜாலி பாய்ஸ் மாரத்தான் போட்டியை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை பெல் சப்ளையர் அசோ சியேஷன், ராணிப்பேட்டை இன்ஜினியரிங் டெவலப்மென்ட் சொசைட்டி மற்றும் பார் ரிட்சா சார்பில் நேற்று மாநில அளவிலான ஜாலிபாய்ஸ் மாரத்தான் போட்டி நடந்தது. இதனை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது, கலெக் டர் பாஸ்கரபாண்டியன் தனது குடும்பத்துடன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டி பெல் தொழிற்சாலை அருகே தொடங்கி, அக்ராவரம் ரோடு, லாலாப்பேட்டை ரோடு வழியாக சென்று வாலாஜாவில் முடிவடைந்தது. 
இதில், ஒன்றிய செயலாளரும் முகுந்தராயபுரம் ஊராட்சி மன்றத் தலைவருமான அக்ராவரம் ஏ.கே.முருகன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பி.செல்வம் ஒன்றியகுழுதுணை தலைவர் ராதாகிருஷ்ணன் மாவட்ட மாணவரணி வினோத், வன்னிவேடு ஊராட்சி துணை தலைவர் பாலாஜி, ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.