ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன் தினம் மாலை துவங்கி நேற்று காலை வரை பர வலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கலவை தாலுகாவில் 3 குடிசைகளும், சோளிங்கர் மற்றும் ஆற்காடு தாலுகாக்களில் தலா ஒரு குடி சையும் மழையால் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

அரக்கோணம் 23 மி.மீ., 
ஆற்காடு 17 மி.மீ., 
காவேரிப்பாக்கம் 15, 
வாலாஜா 26.5, 
அம்மூர் 9, 
சோளிங்கர் 15 மற்றும் 
கலவையில் 42.4 மி.மீ., மழை பெய்தது. 

மாவட்டத்தில் பெய்த மொத்த மழை 147.9 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழை அளவு 21.13 மி.மீ., என, கலெக்டர் அலுவலக பத்திரிகை குறிப்பு தெரிவிக்கிறது.