அரக்கோணம்:அரக்கோணம் அருகே, ரயில் இன்ஜின் தடம் புரண்டதால் 8 மணி நேரம் போராட்டத்திற்கு பின் சரி செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம்- புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கிடையே ரயில்களை நிறுத்தி வைக்கும் யார்டு பகுதி உள்ளது.காலை நேரத்தில் இரட்டை ரயில் இன்ஜின் மட்டும் இப்பகுதியில் சென்ற போது தண்டவாளத்தை விட்டு தரையில் இறங்கி தடம் புரண்டது.ரயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள் தடம் புரண்ட பகுதியை ஆய்வு செய்து, பிரம்மாண்டமான கிரைன் கொண்டு எட்டு மணி நேரம் போராடி தடம் புரண்ட இரட்டை ரயில் இன்ஜினை மீட்டனர்.
விசாரணையில், தொடர் மழையால் யார்டு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்கள் பூமியில் புதைந்ததும், சரியாக பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம் என தெரியவந்தது. அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.யார்டு பகுதில் இரட்டை ரயில் இன்ஜின் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.