வேலூர்/ராணிப்பேட்டை: வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் நள்ளிரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்தது.

தொடர் மழை காரணமாக அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 94.4 மி.மீ மழை பதிவானது. ஆற்காட்டில் 33, காவேரிப்பாக்கத்தில் 57, வாலாஜாவில் 59, அம்மூரில் 25, சோளிங்கரில் 73, கலவையில் 72.4 மி.மீ மழை பதிவானது.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் 53.2, காட்பாடியில் 42, மேல் ஆலத்தூரில் 71.6, பொன்னையில் 44.6, வேலூரில் 63, அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் 51.4 மி.மீ மழை பதிவானது.