மெட்டி ஒலி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஷ்வரி இன்று காலை உயிரிழந்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை உமா மகேஷ்வரி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 40. திடீரென இவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.