அஞ்சல் வாரவிழாவையொட்டி சாதனை 

அஞ்சல் வார விழாவில் 3 ம் நாள் நேற்று சேமிப்பு தினமாக கொண்டா டப்பட்டது . இதற்கான நிகழ்ச்சி வாலாஜா கடப்பேரி அடுத்த கிராமத்தில் நடந்தது . நிகழ்ச்சிக்கு வாலாஜா அஞ்சலக ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார் . 

அரக்கோணம் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கரன் கலந்து கொண்டு பேசினார் . இதில் இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டு கால சிறப்பை குறிக்கும் அம்ரித் மஹோத்உத்சவ் காணொளி திரையிடப்பட்டது . 
இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் . தொடந்து சேமிப்பு தினத்தின் ஒருபகுதியாக தனியார் தொண்டு நிறு வன பங்களிப்புடன் பெண் குழந்தைகளுக் கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் நேற்று மட்டும் ஆயிரம் சேமிப்புகணக்குகள் துவக்கப்பட்டது . 

மேலும் இருநூறு கணக்குகள் துவக்கப்பட உள்ளதாகவும் தொடந்து நாளை அரக்கோணம் , வாலாஜா , ராணிப்பேட்டை , ஆற்காடு , திமிரி , சோளிங்கர் , காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பல அஞ்சலகங்களில் ஆதார் அட்டை திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர் .