ஆற்‌காடு அருகே பாலாற்‌றில்‌ தடைடெறும்‌ மணல்‌ கொள்ளையை தடுக்க வருவாய்த்துறை சார்பில்‌ நேற்று ராட்சத பள்ளம்‌ தோண்டும்‌ பணி நடை பெற்றது. 
ஆற்காடு அருகே பாலாற்றிலிருந்து இரவு நேரங்களில்‌ மாட்டுவண்‌டிகள்‌ மற்றும்‌ வாகனங்களில்‌ கள்ளத்தனமாக மணல்‌ கடத்தி செல்வதாக.அற்காடு தாசில்தார்‌ கோபாலகருஷ்ணனுக்கு ரகசிய தகவல்‌ கடைத்‌தது. 

அவரது உத்தரவின்‌ பேரில்‌ வருவாய்‌ ஆய்வாளர்‌ அமுதவல்லி, விஏஓ மஞ்சுநாதன்‌ மற்றும்‌ வருவாய்‌ துறையினர்‌ நேற்று மாங்காடு, தக்காங்குளம்‌ ஆகிய பகுதிகளில்‌ உள்ள பாலாற்றில்‌ மணல்‌ கடத்‌தலை தடுக்க ஜேசிபி இயந்‌திரம்‌ மூலம்‌ பல்வேறு இடங்களில்‌ ராட்சத பள்‌ளங்கள்‌ தோண்டும்‌ பணியில்‌ ஈடுபட்டனர்‌.

பள்ளங்களை மூடி யாராவது மணல்‌ கடத்திச்‌ சென்றால்‌ அவர்கள்‌ மீது சட்டப்படி. கடும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என வருவாய்த்‌ துறையினர்‌ எச்சரிக்கை விடுத்தனர்‌.