ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அதனால் மொத்தம் உள்ள 57 மதகுகளில்  30 மதகுகள் திறந்து விடப்பட்டது. 

இதனால் பனப்பாக்கம் அடுத்த கலப்பலாம்பட்டு சாலையில் உள்ள தரைப் பாலம் மூழ்கி அதற்கு 3 அடிக்குமேல் தண்ணீர் செல்கிறது. இதனால் வளையம்,சிறுவளையம், ஆலப்பாக்கம், கலப்ப லாம்பட்டு, துறையூர், உளியநல்லுார் போன்ற பகுதிகளில் இருந்து பனப்பாக்கம் அரசு ஆண்கள், மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் ஆபத்து அறியாமல் குளித்தும், நீச்சல் அடித்தும் வருகிறார்கள். 

பைக்கில் வரும் சிலர் அப்படியே தட்டுத் தடுமாறி கரை சேர்கின்றனர். நேற்று பிற்பகல் டிராக்டர் ஒன்று தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது தண்ணீரின் வேகத்தால் நடுவழியில் சிக்கியது. 

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதி காரிகளிடம் கேட்டபோது கரையோரத்தில் வசிக்கின்ற மக்களுக்கும், பொது மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.  வருவாய் துறை அதி காரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தரைப்பாலத் தின் 2 பக்கங்களிலும் தடுப்பு பணிகள் செய்யப்படும் என்று கூறினர்.