ராணிப்பேட்டை கோட்டாட்சியர் உத்தரவின்படி சோளிங்கரில் உள்ள ஏரி கடை வாசல் செல்லும் வழி தடை செய்யப்பட்ட பகுதி என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள ஏரி விடாமல் பெய்த மழையால் ஏரி நிரம்பி கடைவாசல் தாண்டியது இதையடுத்து பொதுமக்கள் தினமும் அங்கு சென்று பார்வையிட்டு கடை வாசல் வழியாக தண்ணீரில் இறங்கி மகிழ்கின்றனர், 

இதை தொடர்ந்து ராணிப்பேட்டை கோட்டாட்சியர் உத்தரவின்படி பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி அப்பகுதி தடைசெய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு மேலும் அப்பகுதியில் தடைகள் கொண்டு தடை செய்யப்பட்டு எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டது இதை சோளிங்கர் பேரூராட்சி நிர்வாகம் அவர்கள் பணியாளர்களைக் கொண்டு பணியை செய்தனர்.