கலவை அருந்தியர் பாளையம் வாழைப்பந்தல் ரோட்டை சேர்ந்தவர் ஏழுமலை(48). கூலி தொழிலாளி. இவர் நேற்று மேல்நேத்தபாக்கம் வெள்ளம்பி ஏரிகால்வாய் பகுதி வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக கலவையில் இருந்து திமிரி நோக்கி சென்ற லோடு ஆட்டோ திடீ ரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஏழுமலைமோதியது. பின்னர், அந்த ஆட்டோ அங்குள்ள புளிய மரத்தின் மீது மோதி நின்றது. இதில் படுகாயம டைந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், ஆட்டோ டிரைவர் கலவைபுத்தூர் கிராமத்தை பாலகிருஷ்ணன்(29) என்பவர் படுகாயம் அடைந்தார்.
தகவலறிந்த கலவை சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஏழுமலை சடலத்தை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆட்டோ டிரைவர் பாலகிருஷ்ணனை மீட்டு ஆற்காடு அரசுமருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்து ஏழுமலையின் மகள் மல்லிகா அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.