திமிரி அருகே உள்ள வெங்கடாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேல் முருகன். இவரது மனைவி நவமணி ( 30 ). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில் நவமணி சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மீண்டும் அவருக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் மனவேதனையடைந்த நவமணி வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து விஏஓ முத்துக்குமார் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 

மேலும் , நவமணியின் தாய் தங்கம்மாள் திமிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிந்து விசாரணை செய்துவருகிறார் .