🎤 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.

💣 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.

👭 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடானது.


நினைவு நாள் :-


✍ 1980ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி தமிழ் திரைப்பட பாடகி, நடிகை கே.பி.சுந்தராம்பாள் மறைந்தார்.


பிறந்த நாள் :-


சுனிதா வில்லியம்ஸ்

✈ இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி பிறந்தார்.

✈ 1987-ல் அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். இவர் 2 ஆண்டுகளில் கடற்படை விமானியானார்.

✈ 2006ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி டிஸ்கவரி விண்வெளிக் கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது இவர் பகவத்கீதை, விநாயகர் சிலை, கொஞ்சம் சமோசாக்களை விண்வெளிக்கு எடுத்துச்சென்றார்.

✈ விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபர் சுனிதா. அங்கு இருந்தபடியே வானொலியில் பேசினார். விண்வெளியில் ஓடிக்கொண்டே தனது தலைமுடியை கத்தரித்தார். பிறகு, லாக்ஸ் ஆப் லவ் அமைப்புக்கு அதை வழங்கினார்.


வில்லியம் கோல்டிங்

✍ இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் நாவல் ஆசிரியரும், கவிஞருமான சர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங் 1911ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியில் உள்ள நியூகி நகரில் பிறந்தார்.

✍ இவர் பல கதை, கட்டுரைகளை எழுதினார். இவரது படைப்புகள் பல முறை நிராகரிக்கப்பட்டாலும், மனம் தளராமல் தொடர்ந்து எழுதினார்.

✍ இவர் லார்டு ஆஃப் தி ப்ளைஸ் என்ற நாவலை 1954-ல் எழுதினார். நன்மை, தீமை இரண்டுக்கும் இடையேயான மனிதனின் உள்முகப் போராட்டங்கள் குறித்த இந்த நாவல் உலகம் முழுவதும் பிரபலமடைந்து, மாபெரும் வெற்றி பெற்றது.

✍ ரைட்ஸ் ஆஃப் பேஸேஜ் நாவலுக்காக 1980-ல் புக்கர் பரிசு பெற்றார். பல விருதுகள், கௌரவங்களைப் பெற்ற இவரது நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. 73 வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். 1988-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது.

✍ சிறுகதை, நாடகம், கட்டுரை, விமர்சனம் என பலவிதமான வெற்றிப் படைப்புகளைத் தந்த வில்லியம் கோல்டிங் தனது 82-வது வயதில் (1993) மறைந்தார்.