ஆற்காடு அடுத்த வளையாத்தூர் மோட்டூர்- வாழைப்பந்தல் சாலையை சேர்ந்தவர் எத்தி ராஜ் மனைவிகுப்பம்மாள் ( 75 ) . இவர்களுக்கு 2 மகன்கள் , ஒரு மகள் உள்ளனர் . அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசிக்கின்றனர் . எத்திராஜ் இறந்துவிட்ட தால் குப்பம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார் . 

இந்நிலையில் , குப்பம்மாள் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளார் . இதனால் மனமுடைந்த அவர் , நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . 

இதுகுறித்து தகவலறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குப்பம்மாள் மகன் முருகன் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .