ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்ன குக்குந்தி பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் அதே பக்கத்து பாப்பேரி சேர்ந்தவர் அர்ச்சனா என்ற இருவரும் கல்லூரி படிக்கும்போது காதலித்து வந்தது தெரியவந்தது இதனையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்
இதில் சுனில் குமாரின் தந்தை வேதபுரி பாரதிய ஜனதா கட்சி ஆற்காடு ஒன்றிய தலைவராக உள்ளார் அவரது மகனின் திருமணத்தை அவர் ஏற்றுக்கொண்ட வேளையில் பெண்ணின் வீட்டில் எதிர்ப்புகள் வந்தனர் 

இந்த நிலையில் இருவரது பெற்றோரும் சம்மதிக்க வேண்டும் என்று நினைத்து பாதுகாப்பு கருதி ராணிப்பேட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுனில் குமார். அர்ச்சனா ஆகிய இருவரும் தஞ்சமடைந்தனர் 
இதனையடுத்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரபு உத்தரவின் பேரில் சம்பவம் குறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் தம்பதியினர் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்து வருகின்றனர்.