அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தார். அப்போது முதல்வர் மு.க ஸ்டாலின் ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் சொன்னார்.