ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம். மெஷினை வெல்டிங் இயந்திரத்தை கொண்டு துண்டுதுண்டாக உடைத்து, சுமார் நான்கு லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெருங்களத்தூர் ஜிஆர்டி பொறியல் கல்லூரி அருகே செயல்பட்டு வரும் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் மையத்தை பராமரித்து வரும் செக்யூர் வேல்யூ என்ற தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 15-ம் தேதி எட்டரை லட்சம் ரூபாய் பணம் நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஏடிஎம் மையத்தை வெல்டிங் இயந்திரங்களின் உதவியோடு துண்டு துண்டாக வெட்டிய மர்ம நபர்கள், அதில் இருந்த மூன்று லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமரா மற்றும் காவலாளி உள்ளிட்ட பாதுகாப்பு எதுவும் இல்லாததால் கொள்ளை நடந்ததது தெரிய வந்துள்ளது.