நாடளுமன்றத்தில் மத்திய அரச தாக்கல் செய்யவுள்ள புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவால், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மசோதா என்ன தான் சொல்கிறது? ஏன் இப்படி கூறப்படுகிறது? உண்மை நிலவரம் தான் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
புதிய மின்சார சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், ஏழை எளிய மக்களுக்கு மின்சாரம் என்பது எட்டாக்கனியாக மாறி விடும். இதனால் நுகர்வோர் கடுமையான பாதிப்பினை எதிர்கொள்ளலாம். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், மின்சார உற்பத்தி, மின் விநியோகம் ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, தனியார் வசம் செல்லலாம்.
ஊழியர்கள் மத்தியில் கருத்து?

இதனால் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு இது சந்தை பொருளாகிவிடும். ஆக இந்த புதிய மின்சார திருத்த சட்டமசோதா நிறைவேற்றப்படக்கூடாது என மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகின்றது.


மின் வாரிய சட்டம் இயற்றப்பட்டால் பாரத் பெட்ரோலியம், ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்ததை போன்று, தனியாருக்கு அனுமதி கொடுக்கும் சூழல் உருவாகலாம். இதனால் மாநில அரசுகளிடம் உள்ள மின் விநியோகம் தனியார்மயம் ஆகும் சூழல் தான் உருவாகும்.


மின்சார சட்டம் 2003ல் பல முக்கிய மாற்றங்கள் செய்து புதிய திருத்தச் சட்ட வரைவை கடந்த ஆண்டில் கொரோனா காலத்தில் (ஏபரல் 17 அன்று) மக்கல் கருத்திற்காக வெளியிடப்பட்டது. ஆனால் மக்கள் கொரோனாவின் கோரப்பிடியில் மத்தியில் சிக்கியிருந்ததால் இது அதிகம் பேசப்படவில்லை.


இந்த திருத்தத்தினால் மாநில மின் வாரியங்களுக்கு பதிலாக மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். உருவாக்கப்படும் இந்த ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி பெற்று மின் விநியோகத்தில் தனியார் நிறுவனம் ஈடுபடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


தமிழகத்திற்கு பாதிப்பு

ஆக இந்த திருத்த மசோதாவினால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஏனெனில் இலவச மின்சாரம் உள்ளிட்ட, மின்சார மானிய சலுகைகள் அப்போதும் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் மாநில அரசுகள் மக்களுக்கு அளித்து வரும் இலவச மின்சார மானிய சலுகைகளை நேரடியாக மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளகடந்த மார்ச் 2018ம் ஆண்டு நிலவரப்படி, தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளின் எண்ணிக்கை 2, கோடியே 2 லட்சத்து 80 ஆகும். தற்போது வழங்கப்பட்டு வரும் மொத்த மின் இணைப்புகளில் விவசாயத்திற்கான மின் இணைப்பு 22 லட்சம் மின் இணைப்புகளாகும். 11 லட்சம் இணைப்புகள் குடிசை சார்ந்ததாகும்.
இது தவிர தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 500 யூனிட், குடிசை தொழிலுக்கு 100 யூனிட், வீடுகளுக்கு 100 யூனிட் இலவசமான மாநில அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு இந்த மின் வி நியோக உரிமையை வழங்கினால், இலவச மின்சாரம் என்பது கேள்விக்குறியாகும்.

அப்படியே இந்த மானியம் தொடர்ந்தாலும், முதலில் மின்சார கட்டணம் செலுத்திய பின்பு மானிய தொகையானது பிறகு, பின்னர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

விவசாயிகளுக்கான இலவச இணைப்பு?

விவசாயிகளை பொறுத்தவரையில் ஒரு ஆறுதலான விஷயம் என்னவெனில், இலவச மின்சாரம் தான். ஆக இந்த இலவச மின்சார மசோதாவால் அதுவும் கேள்விக்குறியாகி விடுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. இதனால் விவசாய துறை மேலும் பாதிக்கப்படும் என்றும் விவசாய ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


ஆடம்பர பொருளாக மாறலாம்

அதோடு இந்த மசோதா திருத்தம் என்பது மாநில அரசுகளின் உரிமையை பறிக்ககூடும். இதில் கவனிக்கதக்க மற்றொரு விஷயம் என்னவெனில் பல தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதுடன், அனைத்து நிறுவனங்களுக்கும் அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த மசோதாவால் மின்சாரம் என்பது விலையுயர்ந்த ஆடம்பர அம்சமாக மாறும் என்றும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.