ராணிப்பேட்டைமாவட்டம் சோளிங்கர் ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டிருந்த மெமோ ரயில் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் இயங்க துவங்கியது.

வேலூரிலிருந்து சென்னை பீச் ரயில் நிலையம் வழியாகத் திருமால்பூர் வரை இயக்கப்பட்ட ரயில், கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரயில் சேவையைத் தென்னக ரயில்வே நிர்வாகம் நிறுத்திவைத்தது. அதனைத் தொடர்ந்து 2021- ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி முதல் மீண்டும் வேலூரிலிருந்து சென்னை பீச் ரயில் நிலையம்வரை மெமோ ரயிலை நிர்வாகம் இயக்கத் தொடங்கியுள்ளது. 
இந்த ரயில் ஏற்கனவே பாஸ்ட் பேசஞ்சர் ரயிலாக இயங்கிவந்த நிலையில் தற்பொழுது விரைவு ரயிலாக இயக்கியுள்ளது. சென்னைக்கு வேலைக்கும் செல்லும் தனியார் நிறுவன ஊழியர்கள் இதில் பயனிக்க நிறுவனங்கள் கொடுக்கும் அத்தாட்சி கடிதம் கொடுத்தால் அதன் மூலம் மாதாந்திர சீசன் டிகட்டை பெற்று பயனிக்கலாம் எனவும், மற்றவர்கள் டிக்கட் எடுத்தால் மட்டுமே பயனிக்ககூடிய வகையில் மெமோ ரயிலை இயக்குவதால் கூலி வேலைக்கு செல்லும் பயனிகள் நாள்தோரும் டிக்கட் எடுத்தே பயனிக்க முடியும். 

இதனால் பயனிகளிடையே ஆர்வமின்றி கடந்த இரண்டு நாட்களாக ரயிலில் பயனிகள் அதிகம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் இந்த ரயிலைப் பாசஞ்சர் ரயிலாக இயக்க வேண்டும் என கூலி தொழிலாளர்கள் ரயில்வே நிர்வாகத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கின்றனா்.

முன்னதாக ஓராண்டை கடந்து மெமோ ரயில் சேவை துவங்கியதால் மகிழ்ச்சியில் வாலாஜாரோட் ரயில் உபயோகிப்போர் நல சங்க நிர்வாகிகள் ரயிலுக்கு வரவேற்ப்பு கொடுத்து மாலை அணிவித்து அங்கிருந்து அனுப்பிவைத்ததாகவும் சோளிங்கர் ரயில் உபயோகிப்போர் நல சங்கத்தினர் பயனிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொரோனா பாதுகாப்பு முறையுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனா்.