ராணிப்பேட்டையில் இன்று (ஆக.,17), பெட்ரோல் லிட்டருக்கு 100.50 ரூபாய், டீசல் லிட்டருக்கு 95.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி நேற்று ராணிப்பேட்டையில் பெட்ரோல் லிட்டர் ரூ 100.41 ஆகவும் டீசல் லிட்டர் ரூ 95.39 ஆகவும் விற்பனையானது.