💣 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி யுரேனியம் என்ற வெடிப்பொருள் நிரப்பப்பட்ட, லிட்டில் பாய் என்ற அணு குண்டை ஹிரோஷிமா மீதும், புளுட்டோனியம் வெடிப்பொருள் நிரப்பப்பட்ட, ஃபேட் மேன் என்ற அணு குண்டை நாகசாகி மீதும் அமெரிக்கா வீசியதில் சுமார் 2,00,000 பேர் இறந்தனர். இந்த பேரழிவின் நினைவாக ஹிரோஷிமா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

🌐 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி உலகளாவிய வலை (WWW) தொடர்பான ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.



பிறந்த நாள் :-

அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்
💉 பென்சிலின் மருந்தைக் கண்டறிந்த அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் 1881ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஸ்காட்லாந்து நாட்டில் லாக்பீல்டுபார்ம் என்ற இடத்தில் பிறந்தார். 

💉 20 வயதில் நோய்த் தடுப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த பேராசிரியர் ஆம்ரைட் டே போல தானும் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என நினைத்து அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.

💉 நோயுண்டாக்கும் கிருமிகளை செயற்கை முறையில் வளர்த்து, அவற்றில் திடீரென்று தோன்றிய நீல நிற பூஞ்சையிலிருந்து பாக்டீரியா தாக்குதலுக்கு எதிரான ஆன்டிபயாட்டிக் மருந்தான பென்சிலினை கண்டறிந்தார்.

💉 1945-ம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனித குலத்திற்கு நன்மை சேர்த்து பல கோடி உயிர்களைக் காப்பாற்றிய இவர் தனது 73வது வயதில் (1955) மறைந்தார்.