✍ 1885ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்முறையாக கதிரியக்க ஐசோடோப்புகளை குறியீடுகளாக பயன்படுத்திய ஜியார்ஜ் டி கிவிசி ஹங்கேரியில் பிறந்தார். 

🏁 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய அரசியல் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மறைந்தார்.

🔷 1774ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

🚜 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

🚫 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி தந்தை பெரியார், தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.


முக்கிய தினம் :-

உலக சாரணர் தினம்
👮 ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலக சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூறும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. 

👮 1907ஆம் ஆண்டு ஜுலை 28ஆம் தேதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பேடன் பவல் என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 

👮 பொதுவாக சில நாடுகளில் ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும்.


உலக தாய்ப்பால் தினம்
🍼 இன்று உலக தாய்ப்பால் தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையிலும், தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உலக மக்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 1ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


நினைவு நாள் :-

பால கங்காதர திலகர்
👉 விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் 1856ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார்.

👉 இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கினார்.

👉 ஸ்ரீஅரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார். பல விடுதலை போராட்டங்களை முன்னின்று நடத்திய இவர், 1908லிருந்து 1914 வரை சிறையில் இருந்தார்.

👉 முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர் தன்னுடைய 64வது வயதில் 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-

டைகர் வரதாச்சாரியார்
🎻 கர்நாடக இசைப்பாடகர் டைகர் வரதாச்சாரியார் 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் பிறந்தார்.

🎻 இவர் தன்னுடைய 14-வது வயதில் சகோதரர்களுடன் சேர்ந்து முறைப்படி இசை பயின்றார். இவர்கள் காலடிப்பேட்டை சகோதரர்கள் என அழைக்கப்பட்டனர்.

🎻 மைசூர் நவராத்திரி விழாவில் பாடிய போது இவர் பாடிய பல்லவியைக் கேட்ட மைசூர் மகாராஜா டைகர் என்ற பட்டத்தை சூட்டி, இவரை அரண்மனை ஆஸ்தான பாடகராக அமர்த்தினார்.

🎻 சென்னை மியூசிக் அகாடமியின் ஆசிரியர்களுக்கான இசைக் கல்லூரி (டீச்சர்ஸ் காலேஜ் ஆஃப் மியூசிக்) முதல்வராக 5 ஆண்டுகள் பணியாற்றினார். பல பாடல்களை இயற்றி மெட்டு அமைத்துள்ளார்.

🎻 இவருக்கு 1932-ல் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டது. கர்நாடக இசைக்கு பெருமை சேர்த்த இவர் தனது 73-வது வயதில் மறைந்தார்.