நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் பல அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது.

குறிப்பாக வீட்டுக் கடனுக்கு அவ்வப்போது பல அதிரடியான சலுகைகளையும் கொடுத்து வருகின்றது.

இது வீடு வாங்க அல்லது கட்ட நினைப்போருக்கு மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

புதியதாக கடன் வாங்குவோருக்கு நல்ல விஷயம்

உண்மையில் எஸ்பிஐயின் இந்த அறிவிப்பானது மிக நல்ல விஷயம் என்றே கூறலாம். குறிப்பாக புதியதாக வீட்டுக் கடன் வாங்க நினைப்போருக்கு மிக நல்ல விஷயம் எனலாம். இதே பெண் வாடிக்கையாளர்கள் எனில் கூடுதலாக இன்னும் சில சலுகைகளை பெற முடியும்.


செயல்பாட்டு கட்டணம் தள்ளுபடி

மொத்தத்தில் எஸ்பிஐ-யின் அடுத்தடுத்த அதிரடியான அறிவிப்புகளினால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன் பெறலாம். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது எஸ்பிஐ அதன் செயல்பாட்டு கட்டணத்தினை ஆகஸ்ட் 31 வரையில் தள்ளுபடி செய்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத அளவுக்கு குறைவாக உள்ளது. இந்த நேரத்தில் செயல்பாட்டு கட்டணமும் குறைவு என்பது இன்னும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.


பெண் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு

இதே பெண் வாடிக்கையாளர்கள் எனில் இன்னும் சிறப்பு எனலாம். ஏனெனில் பெண் வாடிக்கையாளார்களுக்கு சாதரணமாகவே வட்டி விகிதத்தில் சலுகை உண்டு. அதோடு செயல்பாட்டு கட்டணமும் இல்லை என்பது இன்னும் நல்ல விஷயம்.

எவ்வளவு தள்ளுபடி?

தற்போது எஸ்பிஐ வங்கி தற்போது செயல்பாட்டு கட்டணமாக 0.40% வசூலிக்கிறது. இந்த நிலையில் இந்த தள்ளுபடியானது வாடிக்கையாளர்களுக்கு கணிசமான தொகையை மிச்சப்படுத்தும். Monsoon Dhamaka Offer என்ற பெயரில் அறிவித்துள்ள இந்த ஆஃபரானது, கொரோனா நெருக்கடி காலத்தில் பாதிகப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.


இது சரியான தருணம்

மொத்தத்தில் வீடு கட்ட, வாங்க நினைப்போருக்கு இது சரியான தருணம் எனலாம். அதோடு தற்போது எஸ்பிஐ-யில் வட்டி விகிதம் தற்போது 6.70%ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதற்கும் மத்தியில் இந்த கடனுக்கு எஸ்பிஐ யோனோ ஆப்பில் அப்ளை செய்தால் கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடியாகும்.


உதவிகரமாக இருக்கும்

இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கும் வீடு கட்ட, வாங்க நினைப்போருக்கு மிக பெரிய சவலாக இருப்பதே நிதி பிரச்சனை தான். ஆக அப்படி நிதி ரீதியிலான பிரச்சனைகளுக்கு எஸ்பிஐயின் இந்த சலுகையானது மிக உதவிகரமாக இருக்கும். அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

வீடு வாங்குவோரை ஊக்குவிக்கும்

இது குறித்து எஸ்பிஐ வங்கியின் நிர்வாக அதிகாரியான சிஎச் செட்டி, இந்த செயல்பாட்டு கட்டண தள்ளுபடி, வீடு வாங்குவோரை ஊக்குவிக்கும் என நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் ஏற்கனவே வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத அளவு சரிவில் உள்ளது. இதன் மூலம் தேசத்தினை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.


தற்போதைய வட்டி விகிதம்

எஸ்பிஐ-யில் தற்போதைய வட்டி விகிதம் சம்பளதாரர்களுக்கு

SBI Home loans (Term loan) - 6.80% - 7.30 p.a.

SBI MaxGain (Floating Interest Card Rate) - 7.30 - 7.70% p.a.

SBI Insta Home Top Up Loan - 8.20% p.a.

SBI Home Top Up Loan (Term Loan) - 7.50% - 9.55% p.a.

SBI Home Top Up Loan (Overdraft) - 8.40% - 8.65% p.a.

SBI Smart Home Top-Up Loan (Term Loan) - 8.05% p.a.

SBI Smart Home Top-Up Loan (Overdraft) - 8.55% p.a.

SBI CRE Home Loan - 50 bps + final rate

SBI Tribal Plus/CRGFT - 10 bps + final rate

SBI Bridge Home Loan - First year: 9.60% p.a.

SBI Reverse Mortgage Loan - Public: 9.05% p.a.

SBI Bridge Home Loan - First year: 9.60% p.a., Second year: 10.50% p.a.

SBI Privilege and Shaurya - 6.95% p.a. onwards

SBI Realty - 7.65% p.a. onwards

சுயதொழில் செய்வோருக்கு

சுயதொழில் செய்வோருக்கு வட்டி விகிதம்

SBI Home loans (Term loan) - 7.10% - 7.50% p.a.

SBI MaxGain (Floating Interest Card Rate) - 7.45% - 7.85% p.a.

SBI Insta Home Top Up Loan - 8.20% p.a.

SBI Home Top Up Loan (Term Loan) - 7.65% - 9.70% p.a.

SBI Home Top Up Loan (Overdraft) - 8.55% - 8.80% p.a.

SBI Smart Home Top-Up Loan (Term Loan) - 8.55% p.a.

SBI Smart Home Top-Up Loan (Overdraft) - 9.05% p.a.