டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஈட்டி எறிதலில் வீரர் நீரஜ் சோப்ரா முதல் தங்கப் பதக்கம் வென்றார்.

டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சரித்திரத்தை இன்று படைத்திருக்கிறார்.  
நூறு ஆண்டுகள் கனவை தடகளத்தில் முதல் பதக்கம் வென்று சாதித்துள்ளார். நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் 66வது இடத்தில் இருந்த இந்தியா 46வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஒலிம்பிக் தடகள மைதானத்தில் முதல் முறையாக இந்தியாவின் தேசிய கீதம்  வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
இவரது வெற்றிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் , பிரபலங்கள், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.