Hydroponic Farming at Home in Tamil:- ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) முறை என்பது ஒரு மண்ணில்லா விவசாய முறையாகும், அதாவது மண்ணில்லாமல் நேரடியாக நீர் மூலம் செடிகளை வளர்க்கும் முறை தான் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் முறையாகும். இன்றைய நவீன உலகில் மண்ணில்லா விவசாய முறையை பின்பற்ற அதிகம் விரும்புகின்றன, எனவே இந்த பதிவில் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் அமைப்பது எப்படி மற்றும் அதன் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மண்ணில்லா விவசாயம் அமைப்பது எப்படி? – Hydroponic Systems in Tamil

தேவையான பொருட்கள்:-

  • பி.வி.சி பைப் (pvc pipe)
  • Net Pots for Hydroponics
  • களிமண் உருண்டைகள் (Clay Pellets For Plants)
  • போதுமான அளவு தண்ணீர் வசதி
  • பசுமை குடில் (Green Shade for Garden)
ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் அமைக்கும் முறை? – Hydroponic Garden in Tamil

ஹைட்ரோபோனிக்ஸ் அமைக்க தேர்வு செய்த இடத்தில் பி.வி.சி பைப்களில் குறிப்பிட்ட இடைவெளியில் வட்ட வடிவ துளைகள் இடவும்.


பின் அதில் சல்லடை போன்ற பிளாஸ்டிக் கப்களை வைக்கவும்.

செடிகள் உறுதியாக நிற்க ஒரு விதமான களிமண் உருண்டைகளை பிளாஸ்டிக் கப் உள்பகுதியில் போட வேண்டும். இந்த களிமண் உருண்டைகள் நீரில் கரையாது, ஆனால் நீரை உறிஞ்சி ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்.

இந்த விவசாயத்தில் வேர் பகுதிக்கு நேரிடையாக காற்று, நீர் வழங்கப்படுகிறது. இதை பார்ப்பதற்கு ஏரோபோநிக்ஸ் முறையில் காற்று நிறைந்த பி.வி.சி. பைப்புகளுக்குள் மிதந்தபடி செடிகளின் வேர் பகுதி இருக்கும்.

இறுதியாக பசுமைக் குடில் (Green Shade Net) அமைக்க வேண்டும்.
மண்ணில்லாத விவசாயம் அமைப்பதினால் என்ன பயன்? Hydroponic Farming in Tamil

தண்ணீர் வசதி:-

தண்ணீர் பயன்பாடு பெருமளவு குறைகிறது. இதிலிருந்து வெளியேறும் நீர் மறு சுழற்சி செய்வதன் மூலம் மீண்டும் செடிகளுக்கு பயன்படுத்தப் படுகிறது.

இதற்கு தனியா தண்ணீர் விட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பராமரிக்கும் முறையும் மிகவும் எளிது.
ஊட்டச்சத்துக்கள் இடும் முறை:-

செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நீருடன் கலந்து செலுத்தும் போது செடிகள் நன்கு செழித்து வளர்கிறது.

செயற்கை உரங்கள் இடவேண்டிய அவசியம் இல்லை:

பசுமை குடில்களில் வளர்க்கும் போது பறக்கும் பூச்சிகளினால் ஏற்படும் நோய்கள் எதுவும் வருவதில்லை. பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்கள் இல்லாத இயற்கை விவசாயம் இதன் மூலம் செய்யலாம்.
இடவசதி:-

பெரிய அளவில் இட வசதி தேவை இல்லை. குறைவான இடவசதியில் ரசாயன இல்லாத காய்கறிகளை பலமடங்கு உற்பத்தி செய்யமுடியும். வேலை ஆட்கள் யாரும் தேவை இல்லை.

களை நிர்வாகம்:

மற்ற விவசாய முறைகளுடன் ஒப்பிடுகையில் உற்பத்தி செலவு மிகக் குறைவு இந்த முறை விவசாயத்தில் களைகள் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை.
அறுவடை:

இந்த ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் (Hydroponic Farming in Tamil) அமைப்பதன் மூலம் குறைந்த நாட்களில் மிக விரைவாக அறுவடைக்கு வந்து விடும்.

என்னென்ன இரகங்களை பயிரிடலாம்:-

மண்ணில்லாத விவசாயம் அமைப்பதினால் ஆண்டு முழுவதும் எல்லா வகை காய்கறிகளும், பழங்களும் சாகுபடி செய்யலாம்.