விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
வேலூர் சுகாதார மாவட்டத்தைச் சார்ந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய கீழே பட்டியலிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. மருந்தாளுநர் (Pharmacist)
மொத்த எண்ணிக்கை: 10 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
i) மருந்தாளுநர் பட்டயபடிப்பு – 2 வருடம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் பயின்றதற்கான சான்றிதழ்.
ii) தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்து ஒவ்வொரு வருடமும் புதுப்பித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
உயர் வயது வரம்பு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் பின்பற்றப்படும்.
சம்பள விகிதம்:
மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 12,000/- வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேர்வுக் கட்டணம் எதுவும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வி சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ் (இருப்பின்) மற்றும் புகைப்படத்துடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05-08-2021 மாலை 5 மணி வரை
விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பவேண்டிய முகவரி:
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம், சத்துவாச்சாரி, வேலூர்-9
நமது ராணிப்பேட்டையை சம்பந்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் அறிய கீழே உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் இணையுங்கள்.