தமிழகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இரண்டாவது பரவலை முடிவடைந்ததை தொடர்ந்து மூன்றாவது அலை வருவதை தடுப்பதற்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் நகராட்சி நிர்வாகம் பேரிடர் மேலாண்மை துறை என ஆகிய துறைகளின் மூலம் கொரோனா விழிப்புணர்வை மக்களிடம் அறிவுறுத்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ் டோன் புஷ்பராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது 

இந்த விழிப்புணர்வு தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் முககவசம் அணிந்து சோப்பு மற்றும் சனிடைசர் கொண்டு கைகால்களை சுத்தம் செய்த பிறகு மருத்துவமனை உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் மருத்துவமனைகளில் எல்லா இடங்களிலும் கொரோனா விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் அதேபோன்று தனியார் மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தினமும் தொழிற்சாலை உள்ளே செல்லும்போது முக கவசம் அணிந்து உள்ளே செல்ல வேண்டும் பிறகு தொழிற்சாலையில் உள்ளே வேலையில் ஈடுபடுவோர் அனைவரும் கிளவுஸ் மற்றும் முககவசத்தை அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தொழிற்சாலையில் அனைத்து இடங்களிலும் கொரோனா விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டருக்க வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ் டோன் புஷ்பராஜ் அறிவுறுத்தினார்
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் எஸ். எம். எஸ் மருத்துவமனை செயலாளர் அன்பு சுரேஷ் மற்றும் மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலையின் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொரோனாவில் இருந்து நம்மைக் காத்திட வேண்டுமென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.