ஆடி அமாவாசையான நாளை பக்தர்கள் கோயில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 11ம் தேதி ஆடிப்பூரம் நாளிலும் அனைத்து கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும், ஆகம விதிப்படி கோயில்களில் பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.