அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இந்தியாவின் 75- ம் ஆண்டு சுதந்திர தினத்தினை 'அம்ரித் மகோத்சவ்' விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் சைக்கிள் பேரணி அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் இருந்து துவங்கி தக்கோலம், அனந்தாபுரம், புது கேசாவரம், சகாய தோட்டம், உரியூர் ஆகிய கிராமங்கள் வழியாக சுமார் 50 கி மீ தூரத்திற்கு பேரணியாக சென்றனர். 

இதில் 250க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சைக்கிள் பேரணியை தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தின் கமாண்டன்ட் கபில் வர்மன் மற்றும் துணை காமண்டன்ட் வைத்தியலிங்கம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.